தமிழகம்

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

செய்திப்பிரிவு

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 45. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாண்டலின் ஸ்ரீநிவாஸ் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. அடுத்த உலகத்தில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT