நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்ப தாவது:
கூட்டணி குறித்து முடிவெடுக் கும் அதிகாரம் பொதுக்குழு உறுப் பினர்களால் எனக்கு அளிக்கப் பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கவும் அதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவும் இன்னும் 40 நாட்களுக்கு மேல் உள்ளன. இந்த விஷயத்தில் அவசரப்படுவ தற்கோ, பதற்றப்படுவதற்கோ எந்தத் தேவையும் இல்லை.
ஆனால், தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் கூட்டணி குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலை கற்பனையாக வெளி யிட்டு வருகின்றன. என்னைத் தவிர்த்து கட்சியின் மற்ற தலைவர் களை சந்திக்கும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் கூட்டணி பற்றி யூகங்களின் அடிப்படையில் ஊடகங்கள் கேள்விகளை எழுப்பு கின்றன.
கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கூட்டணி குறித்து பாமக விரைவில் முடிவெடுக்கத்தான் போகிறது. தமிழகத்தின் உரிமைகளையும் மக்களையும் பாதுகாக்க எதை செய்ய வேண்டுமோ, அதை பாமக நிச்சயம் செய்யும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.