ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்திற்குப் பின்னர் இதற்கான அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி அளிப்பதாக கூறினார்.
மேலும், மாநில அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை ஜம்மு காஷ்மீர் நிவாரணத்துக்காக வழங்க முன்வர வேண்டும் என ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார்.