காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் அடைந்த விவ காரத்தில் விசாரணை அதிகாரியை நியமித்து 6 வாரத்தில் விரிவான அறிக்கையை பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் ஜெயகுமார் (20). சென்னை பாரிமுனையில் உள்ள முத்துமாரி செட்டி தெரு வில் உள்ள ஒரு வீட்டில் 32 சவரன் நகை திருட்டு போன சம்பவத் தில் சந்தேகத்தின்பேரில் விசா ரணைக்காக எஸ்பிளனேடு காவல் துறையினர் ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன்பு விசா ரணைக்காக அழைத்துச் சென்ற னர். அதிகாலை 3 மணியளவில் ஜெயக்குமார் இறந்துவிட்டதாக காவல் துறையினர் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். காவல்துறையினர்தான் ஜெயக் குமாரை கொலை செய்துவிட்ட தாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான, செய்திகள் ஊடகங்களில் வெளியானது. மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர் பாக, துணை காவல் கண்காணிப் பாளருக்கு இணையான பதவி கொண்ட அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி, 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் விசாரணை பிரிவு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.