நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் சிறப்பாக துப்புரவுப் பணியாற்றிய பணியாளர்களுக்கு தமிழக அமைச்சர்கள் நேற்று ஊக்கத் தொகை மற்றும் பரிசு வழங்கினர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழ கன், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஊக்கத் தொகை மற்றும் பரிசு வழங்கினர்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் நாகை மாவட்டத்துக்கு வந்துள்ளனர். மொத்தம் 7,084 பேர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களிலிருந்து வந்து, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் நெருக்கடிக் கிடையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.1,000 மற்றும் 16 வகையான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 40 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள மேற்பார்வை அலுவலர்கள் வழங்குவார்கள் என்றார்.