தமிழகம்

6 மாநிலங்களில் 8 ஆண்டுகளில் 700 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் தகவல்

செய்திப்பிரிவு

ஈஷா மையம் மூலம் ஆறு மாநிலங்களில் 8 ஆண்டுகளில் 700 கோடி மரக்கன்றுகளை நட உள்ளோம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில், 14-வது ‘ஈஷா கிராமோத்சவ விழா’ அக் டோபர் 20-ம் தேதி தொடங் கியது. விழாவையொட்டி பல் வேறு மாவட்டங்களில் விளை யாட்டுப் போட்டிகள் நடை பெற்ற நிலையில், இறுதிப் போட்டிகள் ஈரோடு டெக்ஸ் வேலி ஜவுளிப்பூங்கா வளாகத் தில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிராமோத்சவ விழாவின் மூலம் தமிழகத்தில் 40 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள னர். எல்லா வயதைச் சேர்ந்த பெண்களும் உற்சாகமாக விளையாட்டுகளில் பங்கேற் றுள்ளனர். அவர்களின் வாழ்க் கையில் இது ஒரு புரட்சி யாகவே மாறியுள்ளது.

தமிழகத்தில் 1990-ல் சர்வ தேச அளவில் பதக்கம் பெற்ற தமிழக வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன் பிறகு, படிப்படியாக குறைந்து விட்டது.

விளையாட்டு அகாடமி

சர்வதேச தரத்தில் விளை யாட்டு வீரர்களை உருவாக்க ஈஷா யோகா மையம் சார்பில் விளையாட்டு அகாடமி இரு ஆண்டுகளில் உருவாக்கப் படும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறிய விளையாட்டரங்கமும், ஒரு பயிற்சி மையமும் இருக்க வேண்டும். இத்திட்டத்துக்கான வரைவினைத் தயாரித்து இரு மாதங்களில் அரசிடம் வழங்கவுள்ளோம். இதன்மூலம் தமிழகத்தை விளையாட்டு வீரர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக மாற்ற முடியும்.

இந்தியாவின் பாரம்பரிய நெசவாளர்களின் திறமைகளை உலக அளவில் சந்தைப்படுத்த பிப்ரவரி 12, 13 தேதிகளில், நியூயார்க் நகரில் ஆடை அலங்கார நிகழ்ச்சி நடத்த வுள்ளோம்.

நதிகளைக் காக்க நாடு முழுவதும் ஈஷா மையம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள் ளது. ஆறு மாநிலங்களில் எட்டு ஆண்டுகளில் 700 கோடி மரக்கன்றுகளை நடவுள்ளோம். காவிரி வடிநிலப்பகுதியில், தலைக்காவிரி முதல் டெல்டா மாவட்டம் வரை என்ன செய்ய வேண்டும் எனபதற்கு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் பெருமை யானது, முக்கியமானது என் பதைபோல் லாபகரமா னது என்பதை உறுதிப்படுத்தா விட்டால் விவசாயம் அழிந்து விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஒலிம்பிக் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி உடனிருந்தார்.

SCROLL FOR NEXT