தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேமுதிக பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும், மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்தவும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள் ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து, கட்சியை பலப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் மாற்றம், கூடுதல் மாவட்ட செயலாளர்கள் நியமனம், தொண்டர்களை மாவட்ட வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கையில் விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவ தால், அவருக்கு உறுதுணையாக இருந்து பிரேமலதா விஜயகாந்த் கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால், அரசி யல் கட்சிகள் தேர்தலை சந் திக்க தயாராகி வருகின்றன. இதற் கிடையே, தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடந்த 4 நாட்களாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வரு கிறார். மொத்தமுள்ள 69 மாவட்ட செயலாளர்களில் இதுவரையில் 30 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள் ளார். இதேபோல், தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேமுதிக பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தேமு திக தலைவர் விஜயகாந்த் தற் போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உறுதுணை யாக இருந்து பிரேமலதா கட்சி பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார்.
90 தொகுதிகளுக்கு நியமனம்
இதேபோல், மாவட்ட செய லாளர்களுடன் தொடர்ந்து கூட்டம் நடத்தி வருகிறார். 234 சட்டப்பேரவை தொகுதிகளுக் கும் தேமுதிக தேர்தல் பொறுப் பாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இது வரையில், 90 தொகுதி பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள தொகுதி பொறுப் பாளர்கள் அடுத்த 3 நாளில் நிய மிக்கப்படவுள்ளனர்.
தேமுதிக வாக்கு வங்கியை 14 சதவீதமாக மீண்டும் கொண்டுவர வேண்டும் என கட்சியின் பொருளாளர் உத்தர விட்டுள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென ஆர்வம் தெரிவிக்கின்றனர். கூட்டணி குறித்த இறுதி முடிவை கட்சித் தலைமை அறி விக்கும்’’ என்றனர்.