என்எல்சி ஊழியர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர் பாக, என்எல்சி தலைமை அலுவல கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக முக்கிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் நெய் வேலியில் இயங்கி வருகிறது. சுமார் 9 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான பழைய ஊதிய மாற்று ஒப்பந்தம், 31.12.2016-ல் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை 28 சுற்றுகளாக கடந்த ஓராண்டு கால மாக நடைபெற்று வந்தது. என்எல்சி இந்தியா நிறுவன நிர்வாகம், பேச்சு வார்த்தைக் குழு, தொழிற்சங்கத் தினர் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு ஏதும் எட்டப் படாத நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதிய ஊதிய மாற்ற ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடங்கியது.
என்எல்சி இந்தியா நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ராக்கேஷ் குமார், இயக்குநர்கள், பேச்சுவார்த்தைக் குழு தலைவர் செயல் இயக்குநர் முத்து, தொழிற்சங்க நிர்வாகிகள் சிஐடியூ தலைவர் வேல்முருகன், பொதுச்செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சீனிவாசன், அலுவல கச் செயலாளர் குப்புசாமி, தொமுச தலைவர் வீரராமச்சந்திரன், பொதுச் செயலாளர் சுகுமாறன், பொருளாளர் குருநாதன், அலுவலகச் செயலர் பாரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் இறுதியில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதாக முக்கிய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிஐடியூ தொழிற் சங்க தலைவர் வேல்முருகன் கூறிய தாவது: கடந்த காலங்களை விட நல்ல ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதில், அடிப்படை சம்பளம் 13.5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். பணி நாட்களை கணக்கிட்டு, அடிப் படையில் 1.5 சதவீதம் வழங்கப் படும். கடந்த 5 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுப்படிகள் 35 சதவீதம், 1.1.2017 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும். 1.1.2017 முதல் பணிக்கொடை ரூ.20 லட்சம் பெற்றுத் தரப்படும்.
இத்தொகை ஓய்வு பெற்றவர்களுக்கும் கிடைக் கும். போனஸ், இன்சென்டிவ், பகுதி வாரியான அலவன்ஸ் ஆகியவற் றுக்கு வரிக்கு முந்தைய லாபத்தில் 8 சதவீதம் ஒதுக்கப்படும். இரவு நேரப் பணிப்படி ரூ.150 பெற்றுத்தரப்படும். பதவி உயர்வு, விடுப்பு, வேலை வாய்ப்பு மற்றும் இதர சலுகைகள் குறித்து குழு அமைக்கப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்றார்.
தொமுச தலைவர் வீர ராமச் சந்திரன் கூறியது: பொதுத்துறை நிறுவனங்களில் இது சிறந்த ஒப் பந்தம். 100 சதவீதம் தொழிலாளர் கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண் டுள்ளனர். தொமுச தொழிலாளர் களுக்கு நன்மை பயக்கும் வகை யில் ஒப்பந்தம் உருவாகியுள்ளது.