தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு வீட்டுக்கே வந்து ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் கே.பழனி சாமி தொடங்கி வைத்தார். இதற்கான கணினி உள்ளிட்ட உபகரணங்களை அலுவலர்களுக்கு அவர் நேற்று வழங் கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
அங்கன்வாடி மையங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டையும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்துமிக்க இணை உணவும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இப்பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்தவும் அங்கன் வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கவும் ரூ.59 கோடியே 2 லட்சம் மதிப்பில் பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட கைபேசிகள் வழங்க அரசு முடிவு செய்தது. இதன்படி இந்த திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக அங்கன்வாடிப் பணியாளர்கள் 5 பேருக்கு கைப் பேசிகளை அவர் வழங்கினார்.
ஆதார் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான பதிவுப் பணிகள் வருங்காலங்களில், அங்கன் வாடி பணியாளர்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு செய்யும் வசதி ஏற்படுத் தப்படுகிறது.
இதற்காக ரூ.13 கோடியே 61 லட்சம் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோமெட்ரிக் இயந் திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1,302 ஆதார் உபகரணத் தொகுப்புகள், 434 குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் களுக்கு வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 7 பேருக்கு ஆதார் உபகரண தொகுப்பை முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார். இதன்மூலம், 5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலர் க.மணிவாசகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பணிகள் துறை இயக்குநர் இரா. கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.