தமிழகம்

உதவி பேராசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

செய்திப்பிரிவு

அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் 26-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணமாக ரூ.600 (எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300) வசூலிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நாளை (வெள்ளி) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT