சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதால், ஜனவரி 3-ம் தேதி தொடங்குவதாக இருந்த திமுக ஊராட்சி சபை கூட்டம் ஜனவரி 8 முதல் பிப்ரவரி 17 வரை நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:
"ஜனவரி 3-ம் தேதி சட்டப் பேரவை கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திமுக ஊராட்சி சபை கூட்டங் கள் ஜனவரி 8 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திலும், பொரு ளாளர் துரைமுருகன் ஈரோடு மாவட்டத்திலும், முதன்மைச் செயலர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஊராட்சி சபை கூட்டத்தை ஜனவரி 8-ம் தேதி தொடங்கிவைப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.