தமிழகம்

ஆன்லைன், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமும் பதிவுத்துறை கட்டணங்களை செலுத்தலாம்: புதிய வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

இணையவழி பணப்பரிமாற்றம், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பதிவுத்துறைக்கான கட்டணங்கள் செலுத்துவதற்கான வசதியை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பதிவுத்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை விரிவாக்கு வதன் மூலம் பொதுமக்களுக்கான சேவையின் தரம் உயர்வதோடு வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்தபடியே இணையதளம் வழியாக விண் ணப்பித்து, கட்டணத்தையும் இணைய வழியிலேயே செலுத்தி, விரைவுக் குறியீடு (க்யூ ஆர் கோடு) மற்றும் சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் இலக்கச் சான்

றொப்பமிட்ட வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகலைதரவிறக்கம் செய்து கொள்ளும்திட்டம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இத்திட்டத்தை, முதல் வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், அச்சான்றிதழில் அச்சிடப்பட்டிருக்கும் விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்தால் சான்றிதழின் நகலினை மையக்கணினியில் இருந்து பார்வை யிடலாம்.  இம்முறையில் சான்றி தழின் உண்மைத் தன்மையை எவரும் அறிந்து கொள்ளலாம். இந்தச் சான்றிதழ்கள், பதிவு விதிகள்படி வழங்கப்படுவதால் உரிய சட்ட அங்கீகாரமும் பெற் றுள்ளது. இந்த புதிய வசதியால், பொதுமக்கள் வில்லங்கச் சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை அறவே தவிர்க்கப்படும்.

மேலும், தற்போது பதிவுத் துறைக்கான கட்டணங்களை 11 வங்கிகளின் இணையவழி மூலம் பணம் செலுத்தலாம். இதற்கு மாற்றாக, இந்திய நிதியமைப்புக்கு உட்பட்ட அனைத்து  வங்கிகள் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அனைத்து பணப்பரிவர்த்தனை முறைகளிலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியை ஒருங்கிணைப்பாளராக கொண்ட

புதிய இணையவழி கட்டணம்

செலுத்தும் முறை அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.

இப்புதிய முறையால் 58 வங்கிகளின் வழியே இணைய வங்கி சேவை, பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை  (கிரெடிட் கார்டு) மற்றும் ஒருங்கிணைந்த கட்டண முகப்பு (யுபிஐ பேமன்ட்) ஆகிய அனைத்து வழிகளிலும் பதிவுத்துறைக்கான கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, பதிவுப்பணிகள் முடிந்ததும் பத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஸ்கேன் செய்யப்படும். அதனையும் சம்பந் தப்பட்டவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம், பத்திரங்களை திரும்ப பெற தாமதமாகும் நிலை யில், மின்னஞ்சல் முகவரியில் பெறப்பட்ட பத்திரத்தை தங்களின் உடனடி தேவைகளுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

மேலும், சீட்டுப் பதிவு மற்றும் சங்கப்பதிவுக்கான மென் பொருள் மேம்படுத்தப்பட்டு ஸ்டார்2.0 மென்பொருளுடன் இணைக் கப்பட்டுள்ளது.

கூட்டாண்மை நிறுவனப் பதிவுக்கு புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.  இவை தவிர, இந்து திருமணப் பதிவு சட்டம், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், தனி திருமணப் பதிவுச் சட்டம், கிறிஸ்துவ திருமணப் பதிவுச் சட்டம், பிறப்பு, இறப்புச் சான்று  வழங்குவதற்கான புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு,  ஸ்டார் 2.0 மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனைத்து சான்றிதழ்களையும் இணைய வழியாக பெற்றுக் கொள்ளும் வசதி, பதிவுற்ற திருமணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை  இணைய வழியாக பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த சேவையையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும் தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் ரூ.57 லட்சத்து 75 ஆயிரம்  மதிப்பிலும் காஞ்சிபுரம் - படப்பை மற்றும் திருச்சி - உறையூரில் தலா ரூ.80 லட்சத்து 90 ஆயிரம்  மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பி.பெஞ்சமின், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர் கே.பாலச்சந்திரன், பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT