மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாஜக - அதிமுக இடையே பேச்சுவார்த்தை தொடங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. சென் னையில் முதல்வர் பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அதே நேரத்தில் அமைச்சர்கள் தங்க மணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதலில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் பணிகளில் தேசிய, மாநில கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. கூட்டணி அமைத்தல், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
ஆளும் பாஜகவை பொறுத்த வரை, மாநிலங்கள்தோறும் அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பணிகளை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தொடங்கிவிட்டார். சமீபத் தில் பிஹாரில் பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது. முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரு டன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என இரு கட்சிக ளுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட வேண்டிய நிலையில்தான் காங் கிரஸ், பாஜக உள்ளன. திமுகவு டன் காங்கிரஸ் கைகோர்த்து கூட் டணியை ஏறத்தாழ உறுதிப்படுத்தி விட்டது.
ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல்முறையாக ஒரு பொதுத் தேர் தலை அதிமுக சந்திக்கவிருக்கிறது. கட்சியில் ஏற்பட்ட பிளவு, இரட்டைத் தலைமை, டிடிவி தினகரன் தரப்பினரின் நெருக்கடி என பலவற்றை அதிமுக சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் மக்களவைத் தேர்த லில் பாஜகவுடன் இணைந்து செயல் படவே அதிமுக விரும்புகிறது.
இதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில், முதல்வருக்கு நெருக்க மான அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றனர். புயல் நிவாரண நிதி கேட்கவே தாங்கள் டெல்லி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவே அவர்கள் சென்றுள்ளதாக கூறப் படுகிறது. அவர்கள் இருவரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது, புயல் நிவாரணம், ஜிஎஸ்டியி்ல் தரவேண்டிய நிதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து இருவரிடமும் கோரிக்கை விடுத் தனர். அத்துடன், அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் தொகுதிப் பங் கீடு குறித்த முதல்கட்ட பேச்சு வார்த்தையும் நடத்தியதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் வேலுமணி கூறும்போது, ‘‘கூட்டணி குறித்து முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்வார்கள்’’ என்றார்.
அதிமுகவுடன் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்து கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால், தொகுதிப் பங்கீடு குறித்த விவ ரங்களையும் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்களுடன் விவாதித் திருக்கலாம் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் முதல்வர் கே.பழனிசாமியை அவரது இல்லத் தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் நேற்று சந்தித்துப் பேசினார். இருவரும் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசியுள்ளனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், கூட்டணி குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.