அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, கடந்த 19-ம் தேதி மதுரை ஆவின் தலைவராக பதவியேற்றார். அன்று மாலையே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக் கட்டுப் பாட்டை மீறி செயல்பட்டதால் அடிப் படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜா நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பா ளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனி சாமி ஆகியோர் அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஓ.ராஜா, தனது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் உறுப்பினராக கட்சியில் இணைந்து பணியாற்ற அனுமதிக் கப்படுகிறார்’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி கள் சிலர் கூறியது: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மறுநாளே ஓ.ராஜா சென்னை சென்று துணை முதல் வர் மூலம் பேச்சு நடத்தினார். சென்னையில் உள்ள கூட்டுறவு இணையத்துக்கு தலைவராக ஓ.ராஜா முயற்சிப்பார் எனக்கருதி பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி எதிர்ப்பு தெரி வித்துள்ளார். கூட்டுறவு இணையத் துக்கு போட்டியிட மாட்டேன் என்று ஓ.ராஜா உறுதி அளித்துள்ளார்.
ஆவின் தலைவர் பதவி கிடைக் காமல் போனதால் ஏமாற்றம் அடைந்துள்ள, ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி செல்லமுத்து வுக்கு, மாநில அளவில் கட்சிப் பொறுப்பு அளிக்க முடிவு செய்யப் பட்டது. ஆவின் இயக்குநர்களாக தேர்வான தினகரன் ஆட்களின் ஆதரவை பெற்றதற்கு ஓ.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். தான் அவ்வாறு செய்யாவிடில், தலைவர் பதவியை அக்கட்சியினர் கைப்பற் றியிருப்பார்கள் என்றும் அவர் கூறி யுள்ளார். இதையடுத்து தலையீட் டால் மன்னிப்பு கடிதம் பெறப் பட்டு, மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டுள்ளார் என்றனர்.