தமிழகம்

தமிழாற்றுப்படை வரிசையில்  சங்கப் புலவர் கபிலர்:  கவிஞர் வைரமுத்து 22-ம் தேதி கட்டுரை அரங்கேற்றம்

செய்திப்பிரிவு

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளை ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.

இதுவரை தொல்காப்பியர் - திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - கம்பர் - அப்பர் – ஆண்டாள் - திருமூலர் - வள்ளலார் - உ.வே.சாமிநாதையர் - பாரதியார் – பாரதிதாசன் - கலைஞர் – மறைமலையடிகள் - புதுமைப்பித்தன் –கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஜெயகாந்தன் என்று

19 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். 20-ம் ஆளுமையாக சங்கப் பெரும்புலவர் கபிலரை ஆய்வு செய்து அரங்கேற்றவிருக்கிறார்.

டிசம்பர் 22 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி அரங்கத்தில் (பழைய சத்யா ஸ்டுடியோஸ்) விழா நடைபெறுகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்திப் பேசுகிறார். கபிலர் திருவுருவப் படத்திற்குத் தமிழன்பர்கள் மலரஞ்சலி செய்கிறார்கள்.

வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், ராஜசேகர், காதர்மைதீன், தமிழரசு, வெங்கடேஷ், செல்லத்துரை, பானுமதி மனோகரன்,  ராஜபாளையம் ராமகிருஷ்ணன், மாந்துறை ஜெயராமன், சண்முகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT