சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.
அதே நேரத்தில் வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா ஆகிய கடலோரப் பகுதிகளில் வளிமண் டல மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும், ஆந்திர நிலப் பகுதியில் காற்று சுழற்சியும் நிலவி வந்தது. இவை இரண்டும் தற்போது வலுவிழந்துவிட்டன.
அதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று வருகி றது. இது தமிழகத்தை நோக்கி நகர்வதால், அடுத்த 24 மணி நேரத் தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். மழைக்கு வாய்ப்பில்லை. புதன்கிழமை காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத் தில் குறிப்பிடும் வகையில் எங்கும் மழை பதிவாகவில்லை. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.