தமிழகம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அலுவலர் பணியிட தேர்வு நடைமுறைகளை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் (ஐடிஐ)இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் கள் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின்போது குறைந்தபட்ச கட் ஆப் மதிப்பெண் 85 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

அதை எதிர்த்து 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தடை நீக்கம்

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கெனவே இதுதொடர்பான நியமனங்களுக்கு தடை விதித்து பின்னர் வேலைவாய்ப்புத் துறை யின் கோரிக்கையை ஏற்று தடையை நீக்கியது.

35 சதவீதம் கட் ஆப்

இந்நிலையில் இப்பணியிடங் களுக்கான கட் ஆப் மதிப் பெண்ணை 35 சதவீதமாக குறைத்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து சரவணன் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதி பதி எஸ்.விமலா, ‘‘தேர்வு நடை முறைகளை தொடரலாம், ஆனால் பணிநியமனங்கள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT