தமிழகம்

கோடைக்கால மின்தேவையைப் பூர்த்தி செய்ய 1,500 மெகாவாட் கொள்முதல்

செய்திப்பிரிவு

சென்னை: கோடைக்​கால மின் தேவைக்காக 1,500 மெகா​வாட் மின்​சா​ரம் கொள்​முதல் செய்ய விரை​வில் டெண்​டர் கோரப்​பட​வுள்​ள​தாக, மின்வாரியம் தெரி​வித்​துள்ளது.

இதுகுறித்​து, மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: கோடைகாலத்தில் மின்​தேவையை பூர்த்தி செய்ய கடந்த காலங்​களில் குறுகிய கால ஒப்​பந்​தங்​கள் மூலம் வெளிசந்​தைகளில் மின்​சா​ரம் பெறப்​பட்​டது. இதனால் அதி​க​மாக செலவு ஏற்​படு​கிறது.

இந்​நிலை​யில், 5 ஆண்​டு​களுக்கு மின்​சா​ரம் பெறும் வகை​யில், நடுத்தர கால ஒப்​பந்​தம் கோர மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யத்​திடம் அனு​மதி கோரி​யிருந்த நிலை​யில், தற்​போது அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. டெண்​டர் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளது விரை​வில் அறி​விப்பு வெளி​யிடப்​படும்​. இவ்​வாறு கூறினர்​.

          
SCROLL FOR NEXT