தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் 1,884 உதவி டாக்டர்கள் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது

செய்திப்பிரிவு

அரசு மருத்துவமனைகளில் 1,884 உதவி டாக்டர் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது.

தமிழகம் முழுவதும் அரசு மருத் துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள், புதிதாக தோற்று விக்கப்படும் பணியிடங்களை நிரப்புவதற்காக, நாட்டில் முதல் முறையாக தமிழக சுகாதாரத் துறைக்கு என கடந்த 2012-ல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரி யம் (எம்ஆர்பி) தொடங்கப்பட்டது. இந்த வாரியம் மூலம் இதுவரை 10,933 டாக்டர்கள், சிறப்பு டாக் டர்கள், 9,533 செவிலியர்கள், 4,198 இதர பணியாளர்கள் உட்பட 24,664 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை களில் 1,884 உதவி டாக்டர் (பொது) தற்காலிக பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிக்கையை தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி வெளியிட்டது. எம்பிபிஎஸ் முடித்த 10,018 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, முகப்பேர் கிழக்கு வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்களில் கடந்த 9-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. 9,353 பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், அவர்களது மதிப்பெண் விவரம் சில நாட் களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அதிக மதிப்பெண் எடுத்த முதல் 2,073 பேர், சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட் டுள்ளனர். சென்னை தேனாம் பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேர்வு வாரிய அலுவலகத் தில் கடந்த 21-ம் தேதி நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் முதல் 150 பேர் பங்கேற்றனர். மற்றவர் களுக்கு வரும் 26, 27, 28, ஜனவரி 3, 4, 7, 8, 9, 10, 11, 21, 22, 23 ஆகிய நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன், அனைவருக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT