சாத்தூரில் தவறான முறையில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிபெண்ணுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடும், உயர்மட்ட விசாரணையும் நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“சிவகாசி மருத்துவமனையில் ரத்தம் எடுக்கப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள ரத்தம் எச்.ஐ.வி. மற்றும் மஞ்சள் காமாலை தொற்றுநோய் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி சாத்தூர்மருத்துவமனையிலுள்ள சில பணியாளர்கள் தற்காகலி பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.
2016-ம் ஆண்டே ரத்த தானம் செய்தவருக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட நபருக்குதெரிவிக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி வெறும் நிர்வாக பிரச்சனைதானா? அல்லது தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வெளிநாடு செல்வதற்கான சோதனையில் கண்டறியப்பட்டதன்காரணமாகவே இந்த பிரச்சனை வெளி வந்துள்ளது. இல்லை என்றால்இன்னும் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும். கர்ப்பிணிப்பெண், குழந்தை, அவர்களது குடும்ப வாழ்க்கை, சமூக நடவடிக்கைகள் அனைத்தும்பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்று வேறு யாருக்கும் நிகழ்ந்திருக்கிறதாஎன்பதும் தெரியவில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு ரத்தவங்கிகள் செயல்படும் முறை, பயன்படுத்தப்படும் கருவிகள், சோதனைப்பொருட்கள்,சோதனை செய்யும் நபர்கள், ரத்தம் பெறும்போதும்,கொடுக்கும்போதும் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன உள்ளது.
ரத்தப்பரிசோதனையில்ஈடுபடுவோரை தேர்ந்தெடுக்கும் முறை இதுபோன்ற பிரச்சனைகள்கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள், பொறுப்புகள் இவையெல்லாம் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதுகுறித்து ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் அது தொடர்பானசெயல்பாடுகள், ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்தபரிசோதனை முறை, ரத்த பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், ரத்த பரிசோதனையில் முடிவுகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு தொடர்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தவறிழைத்தவர் மீது உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டபெண்ணுக்கு 1 கோடி ரூபாய்நட்டஈடும், உரிய உயர் மருத்துவ சிகிச்சையும் தமிழக அரசு வழங்கவேண்டுமென வலியுறுத்துவதோடு, மிக அடிப்படையான மருத்துவசேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டுமெனவும்தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வலியுறுத்துகிறது.”
இவ்வாறு மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.