மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 94 அடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 113 அடியை எட்டியது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத் துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதி களில் மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப் படியாக குறைந்து வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரைவிட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.12 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4,411 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 21,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 21,900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணை நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது.