யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் ஆன்மீக ஊர்வலம், சிறப்பு தபால்தலை வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் கங்கை கரையில் அமைந்துள்ள நர்தரா என்ற அழகிய கிராமத்தில், ராம்தத் குவார் - குசும்தேவி தம்பதிக்கு 2-வது மகனாக 1-12-1918-ம் ஆண்டு பிறந்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார். அவர், திருவண்ணாமலைக்கு 1959-ல் வந்தார்.
ரயில் நிலைய புன்னை மரத்தடியில் 17 ஆண்டுகள் கழித்த அவர், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, சந்நதி தெருவில் உள்ள வீட்டில் 1976-ம் ஆண்டு முதல் வசிக்கத் தொடங்கினார். சந்நதி தெருவில் பக்தர்களுக்கு உபதேசங்கள் மற்றும் ஆசீர்வாதம் வழங்கி வந்தார். அவரது ஆன்மா 20-02-2001-ம் ஆண்டு வெளியேறியது. அவர் வாழ்ந்த வீட்டில், அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா கடந்த ஓராண்டாக கொண்டாடப் பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளான இன்று (டிசம்பர் 1-ம் தேதி) 3 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மீக ஊர்வலம் நடைபெற உள் ளது. மேலும், பகவானின் சிறப்பு தபால்தலை வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, பகவா னின் உற்சவ திருமேனி நாளை (2-ம் தேதி) கிரிவலப் பாதையை சுற்றிவர உள்ளது.