பள்ளிகளில் ஜனவரி 1 முதல், செயல்வழி கற்றலுக்கு தெர்மா கோல் பயன்படுத்தக் கூடாது. மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துவரக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் மீதான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கேற்ப அரசு அலுவலகங் கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன், மறுசுழற்சியில் வராத மக்காத பிளாஸ்டிக் பொருட் களின் உபயோகம் இத்திட்டத் தில் தடை செய்யப்படுகிறது.
இதற்காக பள்ளிக்கல்வித் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாசு கட்டுப் பாட்டு அதிகாரிகள் இணைந்த ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பள்ளிகளுக்கு மாணவர், ஆசிரி யர்கள் எடுத்துவரக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நொறுக்கு தீனி, மதிய உணவு போன்ற வற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்துவரக் கூடாது. மறுசுழற்சி செய்ய முடியாத தெர்மாகோல் போன்றவற்றை செய்முறை கற்றலில் பயன்படுத்தக்கூடாது.
வரும் 1-ம் தேதி முதல் பள்ளி வளாகங்களை பிளாஸ்டிக் இல் லாத பசுமை வளாகமாக மாற்ற வேண்டும். இதை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.