தமிழகம்

பைக் பந்தயத்தில் ஈடுபட்டபோது சோகம்: சாலை தடுப்பில் மோதி இளைஞர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கிழக்கு கடற்கரைச் சாலையில் பைக் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

திருவான்மியூரிலிருந்து கானத் தூர் வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் 4 பைக்குகளில் இளை ஞர்கள் சிலர் பைக் பந்தயத்தில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்ட தாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் கானத்தூரிலிருந்து மீண் டும் திருவான்மியூருக்கு பந்தயத் தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அவர்கள் ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே செல்லும்போது நிலை தடுமாறிய பைக் ஒன்று சாலைத் தடுப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற கொடுங்கையூர் யூனியன் கார் பைடு நகர் 3-வது தெருவைச் சேர்ந்த நிதிஷ்குமார் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்திருந்த கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த தினேஷ் (18) பலத்த காயமடைந்து, உயிருக்கு போரா டிக் கொண்டிருந்தார். அவரை அந்தப் பகுதி பொதுமக்கள் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அடை யாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT