கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து செப்டம்பர் 21-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "வேளாண் மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து 21.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என தெரிவித்துள்ளார்.