தமிழகம்

விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க வகை செய்யும் தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை-2018: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வேளாண் பொருட் கள் வீணாவதை தடுக்கவும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் உருவாக் கப்பட்ட ‘தமிழ்நாடு உணவு பதப் படுத்தும் கொள்கை-2018’ஐ முதல்வர் கே.பழனிசாமி வெளி யிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நபார்டு நிதியுதவியில் கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூரில் ரூ.1 கோடி மதிப்பில் 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டுள்ளது. ராமநாத புரம் மாவட்டம் திருவாடாணையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, அலுவலக கட்டிடம், மதுரை மற்றும் விருதுநகரில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் வேளாண் பொறியியல் விரிவாக்க மைய கட்டிடம் என ரூ.4 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

வேளாண் பொருட்கள் வீணா வதை தடுக்க அதன் மதிப்பை கூட்டி, வலுவான மற்றும் திறன் மிக்க உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள், முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவு பதப்படுத்தும் தொழிலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்த சூழலை உரு வாக்க, துறை சார்பில் தயாரிக் கப்பட்ட ‘தமிழ்நாடு உணவு பதப் படுத்தும் கொள்கை-2018’ என்ற திட்டம் குறித்த புத்தகத்தை முதல் வர் கே.பழனிசாமி வெளியிட, அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு பெற்றுக் கொண்டார்.

விவசாயிகள் வருமானத்தை அதிகரித்தல், உணவுப் பொருட்கள் வீணாவதை குறைத்தல், பண்ணை பொருட்களின் மதிப்பு கூட்டுதல் போன்றவை இந்த கொள்கையின் குறிக்கோள்களாகும். இது தொழில் முனைவோரை ஊக்குவிப்பதுடன், தமிழகத்தில் அதிக அளவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க உரிய வசதி வாய்ப்பு களை அளிக்கும்.

இக்கொள்கையில் நிலம், நீர், மின்சாரம், முதலீட்டு மானியம், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடி யின தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் வட்டி மானியம், வரி ஊக்கத் தொகை, முத்திரைக் கட்டண விலக்கு, சந்தைக்கட்டண விலக்கு, சந்தைப்படுத்த உதவி, தரச்சான்று, போக்குவரத்து உதவி உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக் கப்பட்டுள்ளன. உணவு பதப் படுத்தும் கொள்கையின்படி, தமிழக அரசு உணவுப்பூங்காக்கள் அமைத்து தொழில் முனைவோர் மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற வழிவகை செய்யும். மேலும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, உணவு பதப்படுத்தும் கொள்கையை செயல்படுத்தும் முகமையாக திகழும்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.துரைக்கண்ணு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பா.பாலகிருஷ்ண ரெட்டி, தலைமை செயலாளர் கிரிஜா வைத் தியநாதன், செயலர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT