சென்னைக்கு வந்தாலே புதிய பதவிகள் தேடி வரும். அடுத்த பிரதமராக அமரப் போகிறார் ராகுல்காந்தி என்று துரைமுருகன் பேசினார்.
கருணாநிதி சிலை திறப்பு விழாப் பொதுக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது, இதில் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.
இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:
திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் அப்போதிருந்தே ஒரு தொடர்பு உண்டு. கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தது எங்களுக்குப் பெருமை. ஆளும் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் சோனியா காந்தி.
எதிரிகளை வகுக்கும் திட்டங்களை வீழ்த்தி தன்னிகரில்லா தலைவராக இருந்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.
சென்னைக்கு வந்தால் புதிய பதவிகள் தேடிவரும். ராகுல் காந்தி அப்படியொரு பதவியைப் பெறுவார். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்.