தமிழகம்

புயல் நிவாரணத்துக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவில் டிச.8-ல் மொய் விருந்து: பெண்கள் மேம்பாட்டுக் குழு ஏற்பாடு

கே.சுரேஷ்

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக அமெரிக் காவில் தன்னார்வ பெண்கள் அமைப்பின் சார்பில் டிச.8-ம் தேதி மொய் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஜா புயலால் புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்தன. வீடுகள், பயிர்கள் கடுமையாக சேதம் அடைந் துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு சார்பில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளிலும் இருந்தும் பல்வேறு சமூக நல அமைப்பினர், கட்சியினர் உள்ளிட் டோர் தங்களால் இயன்ற அளவுக்கு நிவாரண பொருட்களைப் பாதிக்கப்பட்டோருக்கு கொடுத்து உதவி செய்து வருகின்றனர். புய லால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வ தற்காக அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் செயல்பட்டு வரும் ‘வாகை பெண்கள் மேம்பாட்டுக் குழு’ எனும் தன்னார்வ அமைப் பின் சார்பில் நிதி திரட்டுவதற்காக டிச.8-ம் தேதி அங்கு மொய் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் தொகையைக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ளவர் களுக்கு உதவ திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து வாகை பெண்கள் மேம் பாட்டுக் குழுவின் தொடர்பாளரான புதுக் கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர் சதீஷ்குமார், ‘இந்து தமிழ்’ செய்தி யாளரிடம் கூறியது: ‘‘புதுக்கோட்டை மாவட்டம் சுமார் 68 ஆண்டுகளாக புயலை சந்தித்திரா ததால், தற்போது கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட் டுள்ள இப்பகுதி மக்களுக்கு உதவி செய்வ தாக அமெரிக்காவில் உள்ள வாகை பெண்கள் மேம்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

அதற்கேற்ப புதுக்கோட்டை மாவட்டத்தில் கலாச்சார முறைப்படி நடத்தப்படும் மொய் விருந்தை, அமெரிக்காவில் நடத்தி நிதி சேகரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டிச.8-ம் தேதி இந்த விருந்து நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழும் அந்நாட்டில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இவ்விருந்தில் கலந்துகொண்டு நிதி அளிப்போருக்கு தலப்பாக்கட்டி பிரியாணி, சிக்கன் சுக்கா, நாட்டு கோழிக்குழம்பு, சிக்கன் குருமா உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொருட்களுடன் அசைவ உணவும், சாம்பார் சாதம், மிளகு சாதம், சப்பாத்தி உள்ளிட்டவற்றுடன்கூடிய சைவ உணவும் பரிமாறப்பட உள்ளது. இந்த விருந்தின் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு, இங்குள்ள தன்னார்வ ஆசிரியர்களைக்கொண்ட அமைப்பான ‘கல்வியாளர்கள் சங்கம்’ எனும் அமைப்பின் மூலம் சூரிய ஒளியில் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன’’ என்றார்.

SCROLL FOR NEXT