முன்னதாக அங்கு காத்திருந்த பெண்கள், அமைச்சர் சி.விஜயபாஸ்கரை திரளாகச் சென்று சந்தித்தனர். அப்போது, “புயலால் தங்களது வீடு, தென்னை, பலா மரங்கள், சாகுபடிகள் என அனைத்தையுமே இழந்து நிற்கிறோம். கூலி வேலை கூட கிடைக்கவில்லை. பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரங்களை முழுவதுமாக இழந்துள்ளதால் கடன்களைத் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயக் கடன், சுய உதவிக் குழுக் கடன் என அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். “இதுகுறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும்” என அவர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.