தமிழகம்

திமுக எம்எல்ஏக்கள் - எம்பிக்கள் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும்: க.அன்பழகன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 24-12-2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT