சென்னையில் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகர் முழு வதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.
மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக வலைதளங்களை பின் தொடர் வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், ஒருவர் பகிரும் தகவல் அடுத்த வினாடியே பல ஆயிரக்கணக் கானோரை சென்றடைகிறது. பிரப லங்கள், தனிநபர்களை குறி வைத்து ஏராளமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களை அடையா ளம் கண்டு அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க சென்னை போலீ ஸார் முடிவு செய்துள்ளனர். அதுற்காக வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களை உன்னிப்பாக கண் காணித்து வருகின்றனர். அமைதி யைக் குலைக்கும் வகையில் பகிரப்படும் தகவல்கள் குறித்து காவல் ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகி றது. தவறான தகவல்களை பகிர் பவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.