விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சட்ட விரோதமாக இயங்கி வந்த பட்டாசு கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாயினர். 3 பேர் பலத்த தீக் காயம் அடைந்தனர்.
மத்தியசேனை அருகே உள்ள காரிசேரியில், திருத்தங்கலைச் சேர்ந்த ராமர் மற்றும் முத்துராமன் ஆகியோருக்குச் சொந்தமான ரமேஷ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை உள்ளது.
உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் கடந்த மாதம் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்திய போது, விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து, பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த மாதம் 6-ம் தேதி ரத்து செய்யப்பட்டதுடன், பட்டாசு உற்பத்திக்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டாசு ஆலைக்கு அருகிலேயே சட்ட விரோதமாக 5 அறைகள் கொண்ட கிடங்கு அமைத்து, அதில் மூலப் பொருட்களை இருப்பு வைத்துள்ளனர்.
அந்தக் கிடங்கிலேயே 20-க்கும் அதிகமான தொழிலாளர் களைக் கொண்டு ஃபேன்ஸி ரக பட்டாசுகளை தயாரித்து வந் துள்ளனர். இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், கிடங்கில் வைத்திருந்த பட்டாசு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட தீ மற்ற அறை களுக்கும் பரவி அங்கிருந்த பட்டாசுகளும், பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தும் அலுமினிய பவுடர் உள்ளிட்ட மூலப் பொருட்களும் வெடித்துச் சிதறின.
இதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த திருத்தங்கல் பெரியார் காலனியைச் சேர்ந்த கருப்பையா மகன் மாரியப்பன்(29), நடராஜன் மகன் அருள்ராஜ்(45) ஆகியோர் உடல் கருகி பலியாயினர்.
மேலும், பலத்த தீக்காயம் அடைந்த திருத்தங்கல் பெரி யார் காலனியைச் சேர்ந்த பிரபா கரன்(24), ரமேஷ்(29), திருத் தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த முரளி(25) ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். தகவல் அறிந்து சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலையங் களில் இருந்து 2 வாக னங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் கிடங்கில் இருந்த 5 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின. கிடங்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த மினி வேனும் தீப்பற்றி சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
பட்டாசு ஆலைக்கு ஆர்டர் பெற்றுத் தரும் ஒப்பந்ததாரரான திருத்தங்கலைச் சேர்ந்த அழகர் சாமியை போலீஸார் கைது செய்தனர்.