ஹைதராபாத்தைச் சேர்ந்த கீதா ரெட்டி(53) என்பவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராக பணிபுரிகிறார். கடந்த 20-ம் தேதி உறவினர்கள் மற்றும் தோழி கள் என 12 பேருடன் வேனில், வேலூர் தங்ககோயில், காஞ்சிபு ரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, நேற்று முன் தினம் மாலை திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த அவர், உற்சவர் சண்முகர் சன்னதியில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அப்போது கவனக் குறைவால் தனது பையின் ஜீப்பை மூடாமல் இருந்துவிட்டார். கோயிலுக்கு வெளியே வந்த போது, பையில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ், ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடு போனது தெரியவந்தது. இது தொடர்பாக, கீதா ரெட்டி கோயில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கீதாரெட்டி பையின் ஜீப் மூடாமல் இருந்ததைப் பார்த்த மர்ம பெண் ஒருவர், கூட்டநெரி சலை பயன்படுத்தி பையின் மீது சேலையின் முந்தானையை போட்டு, வைர நெக்லஸ் மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.