தமிழகம்

பிளஸ் 1 மாணவியை திருமணம் செய்த சென்னை இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

செய்திப்பிரிவு

பள்ளி மாணவியிடம்  ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்த சென்னை இளைஞர் சதீஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, கிண்டி, மடுவாங்கரை பகுதியில் வசித்து வரும் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மகள் ராதிகா (17 -பெயர் மாற்றப்பட்டுள்ளது).  ராதிகா அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வேளச்சேரியைச் சேர்ந்த சதிஷ் (22) என்பவர் மேற்படி ராதிகாவைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 24.12.2018 அன்று சதிஷ், மாணவி ராதிகாவிடம் ஆசை வார்த்தை கூறி திருப்பதி அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து, பள்ளி மாணவிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷை நேற்று (29.12.2018) கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT