தமிழகம்

குட்கா விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் 6 பேரிடம் சிபிஐ விசாரணை

செய்திப்பிரிவு

குட்கா விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமை யாளர்கள் மாதவராவ், பங்குதாரர் கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி கள் செந்தில் முருகன், சிவக் குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத் தில் நடைபெற்று வருகின் றது. இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2-ம் கட்ட விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தற்போது நடத்தி வருகின்றனர். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவி யாளர்கள் சரவணன், சீனிவாசன், வழக்கறிஞர் வேலுகார்த்திக், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக காவல் துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசா ரணை நடத்தினர்.

2013-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் தலைமையில் புழலில் உள்ள குட்கா ஆலையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் நேற்று விசாரணை நடை பெற்றது. யாரிடமெல்லாம் விசாரணை நடைபெற்றது என்ற விவரத்தைக் கூற சிபிஐ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT