தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட் டுள்ளதாக அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன், தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 575 தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
புதிய மாற்றத்தை முன்னிறுத்தி தெளிவாக, நேர்மையாக, தொலைநோக்குப் பார்வையுடன் நமது ஒவ்வொரு நகர்விலும் தமிழர்களின் பெரும் நம்பிக்கையாக நாம் வலுப்பெற்று வளர்ந்து கொண்டே இருக்கிறோம். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
பதவி அல்ல; பொறுப்பு
மக்கள் நீதி மய்யத்தில் வழங்கப்படுவது பதவி அல்ல. அது ஒவ்வொருவரின் பொறுப்பு என் பதை பலமுறை கூறியிருக்கிறேன். அதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
இதை நினைவில் வைத்து, நமது கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமை உணர்வுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பொறுப்பை தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். தொகுதி பொறுப்பாளர்களின் வரவு, மக்கள் நீதி மய்யத்தை வலுப்படுத்தும். மக்கள் நீதி மய்யத்தின் வலிமை தமிழகத்தை வளப்படுத்தும்.
இவ்வாறு அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.