பிளாஸ்டிக் தடை தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான விழிப்புணர்வு கட்டுரை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன் படுத்த தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமலாக ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், தடையை எப்படி அமல்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்வி, அனைவரது மனதிலும் உள்ளது. ஆனால், அமல்படுத்த முடியும் என்று நிரூபித்து வருகிறது கோவை ராமநாதபுரத்தில் ஒரு ஹோட்டல். அங்கு பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், பாத்திரங்களை எடுத்து வந்துதான் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதுதொடர்பாக, ‘பாத்திரம் கொண்டுவந்தால் மட்டுமே பார்சல்; பிளாஸ்டிக் தடையை சாத்தியமாக்கிய கோவை ஹோட்டல்' என்ற தலைப்பில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 3-ம் தேதி விரிவான கட்டுரை வெளியானது. இந்நிலையில், பிளாஸ்டிக் தடை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள http://www.plasticpollutionfreetn.org/pdf/Food_vessel031218.pdf இணையதளத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது