தமிழகம்

அறவாணன் மறைவு: திருநாவுக்கரசர், தமிழிசை இரங்கல்

செய்திப்பிரிவு

ல்லை மனோன்மணியம் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திரு க.ப.அறவாணன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘சென்னை மற்றும் நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருத்தமும், துயரமும் அடைகிறேன்.

நெல்லை மாவட்டத்தின் கடலங்குடியைச் சோந்த க.ப.அறவாணன் அவர்கள் இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் செயலாளராகவும், இஸ்லாமிய தமிழிலக்கிய கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் திகழ்ந்தவர். 

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல் இலக்கணம், கல்வியியல், வரலாற்று திறனாய்வு முதலான துறைகளில் சுமார் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.  1986ம் ஆண்டில் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது பெற்றவர். தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை மும்முறைபெற்றவர் திரு அறவாணன் அவர்கள்.

வெள்ளுடையும், வெள்ளைத் தொப்பியும் திரு அறவாணன் அவர்களது  அடையாளமாக திகழும் இவர் பழகுவதற்கு இனியவர், சிறந்த பண்பாளர். இவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்.தமிழறிஞரின் மரணம் தமிழகதிற்கும் உலகத்தமிழருக்கும் பேரிழப்பு.அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவரது குடும்பத்தாருக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிக்கிறேன்’’ எனக் கூறியுள்ளளார்.

SCROLL FOR NEXT