தமிழகம்

21,449 மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம்

செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை குறித்து பள்ளி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் இயக் கம், ரயில் நிலையங் களில் உள்ள வசதிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அம்சங் கள் குறித்து பள்ளி மாணவர் களுக்கு விளக்கம் அளிக்கப் படுகின்றன.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 3,028 மாணவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி முதல் இதுவரையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாண வர்கள் மொத்தம் 21,449 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய் துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT