தமிழகம்

ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: ஏப்ரல் 17-ம் தேதி கடைசி நாள்

செய்திப்பிரிவு

இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் கு.தேவராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

ஜூன் மாதம் நடக்கவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வு) தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத் துடன், ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

அலைச்சல் தேவையில்லை

டயட் நிறுவனங்களில் வெப்-கேமரா வசதி செய்யப்பட்டு இருப்பதால், அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துகொண்டு, தேர்வுக் கட்டணமும் செலுத்திவிடலாம். எனவே, தேர்வர்கள் அலைச்சல் இன்றி எளிதாக விண்ணப்பிக்க டயட் நிறுவனத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தேர்வுக் கட்டணம்

தேர்வுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் முதல் ஆண்டுக்கு ரூ.100. இரண்டாம் ஆண்டுக்கு ரூ.100. பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15. ஆன்லைன் பதிவுக் கட்டணம் (ஒரு விண்ணப்பத்துக்கு) ரூ.50. விண்ணப்பப் படிவங்களை ஏப்ரல் 10 முதல் 17-ம் தேதி வரை (13, 14-ம் தேதிகள் தவிர) சமர்ப்பிக்கலாம்.

தகுதியில்லாத தேர்வர்களிட மிருந்து பெறும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அந்தச் செய்தியில் தேவராஜன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT