தமிழகம்

அதிமுக - அமமுக கட்சிகள் இணைப்பா?- நிர்வாகிகளின் கருத்துகளால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கி.கணேஷ்

அதிமுக - அமமுக கட்சிகள் இணைப்பு தொடர்பான நிர்வாகிகள் தெரிவித்துள்ள கருத்துகளால் அரசியல் வட்டாரத்திலும், அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து ஓரங்கட் டப்பட்டதால் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட் சியை தொடங்கியுள்ளார் டிடிவி தினகரன். அதிமுகவைப் போலவே அனைத்து நிலைகளிலும் நிர்வாகி களை நியமித்துள்ளார். ‘தற்காலிக ஏற்பாடாகத்தான் புதிய கட்சி தொடங்கியுள்ளோம். அதிமுகவை யும் இரட்டை இலை சின்னத்தை யும் கைப்பற்றுவோம் என்று தினகரன் கூறிவருகிறார். அத் துடன், அதிமுகவில் தங்கள் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்.

ஆனால், அதிமுகவில் இருந்து இதுவரை எந்த ஸ்லீப்பர் செல் களும் வெளிவரவில்லை. முதலில் தினகரனுக்கு எதிராக கருத்து சொல்லாமல் இருந்த சில அமைச் சர்களும், தற்போது அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, தினகரன் ஆதர வாளர்களான 18 எம்எல்ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிமுக வுக்கு அதிக பலத்தை அளித்துள் ளது. இதையடுத்தே, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற அமமுகவினர் அதிமுகவுக்கு வரலாம் என்று முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்தனர். ஆனால், அவர்கள் அழைப்பை அமமுகவில் யாரும் ஏற்கவில்லை.

இந்நிலையில், நெல்லையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், ‘‘அதிமுக -அமமுக பிரிந்திருந்தால் பலவீனம். தமிழ கத்தில் திமுக - காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் என்பதால், இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்று பாஜக நினைப்பதாக செய்தி கள் வருகின்றன.

இது நல்ல சூழல்தான்

இது நல்ல சூழல்தான். இணைந் தால் நல்லதுதான். முதல்வரையும், சில ஊழல் அமைச்சர்களையும் மாற்றினால் இணைய நாங்கள் தயாராக உள்ளோம்’’ என்றார்.

கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது அவரது கருத்து. அதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நடத்தி வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்தில் வந்து இணைய வேண் டும் என்று இருவரும் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இணை வதற்கான வழியைத்தான் மறை முகமாக தங்க தமிழ்ச்செல்வன் சொல்கிறார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

இரு கட்சிகளையும் இணைக்க பாஜக முயற்சிக்கிறது என்ற கருத்து தற்போது 2-வது முறையாக வெளியாகிறது. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு அதிமுக - அமமுகவை இணைந்து பலம் பெற்றால் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியும் என பாஜக நம்பு வதாகவும், அதற்காக இருதரப்புக் கும் நெருக்கடி அளிப்பதாகவும் தகவல் வெளியானது. அதை 3 தரப்பினரும் மறுத்தனர்.

ஆனால், தற்போது தங்க தமிழ்ச் செல்வனே இதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தினகரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களைத் தவிர்த்து யார் எங்களிடம் வந்தா லும் சேர்த்துக் கொள்வோம். நாங்கள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு பாஜகவின் நெருக்கடியும் தேவை யில்லை. அதுபோன்ற நெருக் கடியை பாஜகவும் தரவில்லை. அமமுகவில் சலசலப்பு உருவாகி யுள்ளதையே இது காட்டுகிறது’’ என்றார்.

பாஜக மறுப்பு

அமமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தங்க தமிழ்ச்செல்வன் தனது சொந்த கருத்தை கூறி யுள்ளார். நாங்கள் 20 தொகுதி களிலும் வெற்றி பெறும் முயற்சி யில் உள்ளோம். அதன்பின் அதிமுகவில் இருந்து எல்லோரும் எங்களிடம் வந்து சேருவார்கள்’’ என்றார். கட்சிகள் இணைப்புக்கு நெருக்கடி அளிக்கப்படுவதாக வெளியாகிய செய்திகளை பாஜக தரப்பும் மறுத்துள்ளது.

சட்டப்பேரவை இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் அதிமுக - அமமுக தரப்பில் இருந்து வெளியாகி வருவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT