தமிழகம்

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் இயல் இசை நாடக விழா 9-ம் தேதி தொடக்கம்: பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓம்காரநந்தா கலைஞர்களுக்கு விருது வழங்குகிறார்

செய்திப்பிரிவு

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் 38 நாட்கள் நடைபெறும் இயல் இசை நாடக விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் டிசம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் இயல், இசை, நாடக விழா கடந்த 38 ஆண்டுகளாக சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. 39-வது ஆண்டு விழா வரும் டிசம்பர் 9-ம் தேதி, தியாக ராய நகரில் உள்ள வாணி மஹா லில் தொடங்குகிறது. அதில் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓம்காரநந்தா பங்கேற்று விழாவைத் தொடங்கி வைக்க உள்ளார்.

அன்றைய நிகழ்ச்சியில் இசை, நாட்டியம், வாய்ப்பாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ‘வாணி கலா சுதாகரா’ விருதும், ரொக்கப் பரிசும் வழங்க உள்ளார். அந்த விருதை, வாய்ப்பாட்டு கலைஞர் சீதா நாராயணன், வயலின் இசைக் கலைஞர் கும்பகோணம் எம்.ஆர்.கோபிநாத், கடம் இசைக் கலைஞர் வைக்கம் கோபாலகிருஷ்ணன், பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா, நாடக கலைஞர் ஒய்.ஜி.மகேந்திரா ஆகியோர் பெற உள்ளனர்.

பரத நாட்டிய ஆய்வாளர் எஸ்.ரகுராமன் பங்கேற்று, இந் நிகழ்ச்சியில் விருது பெற்றோரைப் பாராட்டி வாழ்த்த உள்ளார். விருதாளர்களுக்கான ரொக்கப் பரிசுகளை பி.விஜயகுமார் ரெட்டி, டாக்டர் பிரீத்தா ரெட்டி ஆகியோர் வழங்க உள்ளனர்.

38 நாட்கள்

நிகழ்ச்சியில் விஜயா வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்.ஏ.சங்கரநாராயணன், சிண்டி கேட் வங்கி பொதுமேலாளர் எம்.பிரசாத், இந்தியன் வங்கி பொதுமேலாளர் எம்.கார்த்திகே யன் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இந்த விழா, ஜனவரி 15-ம் தேதி வரை 38 நாட்கள் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT