தமிழகம்

அதிமுக புதிய நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வரு மான கே.பழனிசாமி, ஒருங்கிணைப் பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

அதிமுக மனுக்கள் குழு உறுப் பினராக அக்கட்சியின் துணை ஒருங் கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக இந்து சமய அறநிலை யத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், திருவண்ணா மலை வடக்கு மாவட்டச் செய லாளராக தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்ற னர்.

அதிமுக மனுக்கள் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி.முனுசாமி நேற்று காலை முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

SCROLL FOR NEXT