நாளை நடைபெறவுள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் தலை வர்களை சந்தித்துப் பேசு கிறார்.
வரும் மக்களவைத் தேர்த லில் பாஜகவுக்கு எதிராக வலு வான மெகா கூட்டணி அமைப் பது பற்றி ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நாளை (டிச. 10) நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், ராஜஸ் தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோ ரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு கள் வரும் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினமே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரும் தொடங்குகிறது.
இந்தச் சூழலில் பாஜக வுக்கு எதிரான கட்சித் தலைவர் களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது அரசியல் அரங் கில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
முக்கிய ஆலோசனை
ராமர் கோயில் விவகாரம், ரஃபேல் போர் விமான ஒப்பந்த பிரச்சினை, 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவை, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுப் பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட இருப்பதாகக் கூறப்படு கிறது.
வரும் மக்களவைத் தேர்த லில் பாஜகவை வீழ்த்த வலுவான மெகா கூட்டணி அமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். ராகுல் காந்தி, சீதா ராம் யெச்சூரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
கூட்டணி குறித்து முடிவு
அதன் தொடர்ச்சியாக டெல்லியில் நாளை நடை பெறும் கூட்டத்தில் பாஜக வுக்கு எதிரான மெகா கூட் டணியை முடிவு செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக் கப்படும் என மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சோனியாவுக்கு வாழ்த்து
இந்தக் கூட்டத்தில் பங்கேற் பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் முன் னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட் டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
சிலை திறப்புக்கு அழைப்பு
சென்னை அண்ணா அறிவா லயத்தில் அண்ணா, கருணா நிதி சிலை வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான அழைப்பிதழையும் சோனியா காந்தியிடம் ஸ்டா லின் நேரில் வழங்குகிறார்.
டெல்லியில் ஸ்டாலின் 2 நாட்கள் தங்குகிறார். அப் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செய லாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி ஆகியோரை ஸ்டாலின் சந்திக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல் வேறு தலைவர்களையும் ஸ்டாலின் சந்தித்துப் பேச இருப்பதாக திமுக நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.