தமிழக நிலப்பகுதிக்கு மேலே மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழக நிலப்பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை செயலிழந்து மேலடுக்கு சுழற்சியாக ஒட்டுமொத்த தமிழகம், கேரள நிலப்பரப்புக்கு மேலே நீடிக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், கேரளா, தெற்கு கர்நாடகா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று பரவலமாக மழை பெய்யும்.
ஒரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். காரைக்கால் மற்றும் புதுச்சேரி இடையே நாகை வடக்கு, கடலூர், தஞ்சை மாவட்ட அணைக்கரை பகுதி,அரியலூர் மாவட்ட கிழக்கு பகுதியில் மழை தொடர்கிறது.
இந்த மழை திருவள்ளூர் தொடங்கி சென்னை என படிப்படியாக விலகும். நாளை தென் மாவட்டங்களில் விலகும். நாளை வரை தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு இந்த முறை மழை விலகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.