தமிழகம்

பாலியல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை: மருத்துவமனைக்கு சென்று தீர்ப்பளித்த நீதிபதி

செய்திப்பிரிவு

விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன்(64) என்பவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் அவரை கைது செய்தனர். கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

நீதிபதி லிங்கேஸ்வரன், நேற்று முன்தினம் இவ்வழக்கில் தீர்ப்பளிக்க ஆயத்தமானார். சங்கரநாராயணனை குற்றவாளி என்று அறிவித்த உடனே, நீதிமன்றத்தில் சங்கரநாராயணன் மயங்கி விழுந்தார். இதனால் தீர்ப்பு வழங்குவது தடைப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரை, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நீதிபதி லிங்கேஸ்வரன், நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் சங்கரநாராயணன் சிகிச்சை பெற்று வரும் பிரிவுக்கு நேரில் சென்று, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT