தமிழகம்

புயல் நிவாரண நிதிக்கு ரூ.34 கோடி சேர்ந்தது: அதிமுக சார்பில் ரூ.1 கோடியை முதல்வரிடம் ஓபிஎஸ் வழங்கினார்

செய்திப்பிரிவு

புயல் நிவாரண நிதியாக அதிமுக சார்பில் முதல்வர் கே.பழனிசாமி யிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ரூ.1 கோடி வழங்கி னார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, புயல் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

முதல்வர் கே.பழனிசாமியிடம், என்எல்சி நிறுவனம் சார்பில் மேலாண் இயக்குநர் ராகேஷ்குமார் ரூ.6 கோடியே 79 லட்சம், சன் குழுமம் சார்பில் சன்டிவி நெட்ஒர்க் தலைமை செயல் அலுவலர் சண்முகம், தலைமை நிதி அலுவலர் நாராயணன் ஆகியோர் ரூ.2 கோடி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.1 கோடி, ஜெயலலிதா பேரவை சார்பில் ரூ.50 லட்சம், வழங்கினர்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.33 கோடியே 80 லட்சம் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

SCROLL FOR NEXT