தமிழகம்

புயல் நிவாரண பொருட்களுக்கு ரயிலில் இலவசம்

செய்திப்பிரிவு

சென்னை

அனைத்து ரயில்வே பொதுமேலா ளர்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரயிலில் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்கு சரக்குக் கட்டணம் வசூலிப்பதில்லை என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் அனுப்பப்படும் நிவா ரணப் பொருட்களுக்கு இது பொருந்தும். அரசு அமைப்பு கள் இலவசமாக பொருட்கள் அனுப்பலாம். நிவாரணப் பொருட் களை அனுப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது அப் பகுதி துணை ஆணையர் அந்தஸ் தில் உள்ளவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். நிவாரணப் பொருட் களை வழக்கமான சரக்குப் பெட்டியில் ஏற்றாமல், மற்ற பெட்டிகளில் கொண்டு செல்ல கோட்ட ரயில்வே மேலாளர் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த அனுமதி டிசம்பர் 10-ம் தேதி வரையிலோ அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ அமலில் இருக்கும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT