தமிழ்நாட்டில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதைக் கண்டித்து தமிழ்நாடு ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதைக் கண்டித்து தமிழ்நாடு ஒடுக் கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இவ்வியக்கத்தின் மாநிலத் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலை வருமான நல்லகண்ணு கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதைக் கண்டித்தும், தமிழக அரசு பெண் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ் நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ் வுரிமை இயக்கத் தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நெஞ்சமெல்லாம் புண்ணாகும் அளவுக்கு சாதீயக் கொடுமைகள் நடக்கின்றன. ஆணவ படுகொலை மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது வேதனையளிக்கிறது. எத்த னையோ பெருமைகள் கொண்ட தமிழகத்தின் மதிப்பு ஆணவ கொலைகள், சாதியப் படுகொலை களால் குறைந்துள்ளது. எனவே, ஆணவப் படுகொலைகளையும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை களையும் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காதல் திருமணம் செய்வோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் பி.பத்மாவதி உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.