சுதந்திர தினத்தன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மதுபானம் சில்லறை விற்பனை மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபான விதிகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.